மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கும் செங்கலடிக்கும் இடைப்பட்ட தொடருந்துப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளார்.
செங்கலடியைச் சேர்ந்த சரவணபவன் சங்கீதன் (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இவருடன் மற்றுமொரு சிறுவன் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்று கொண்டிருந்த தொடருந்து ஏறாவூருக்கும் செங்கலடிக்கும் இடைப்பட்ட பகுதியை கடக்கும்போது இந்த சிறுவர்கள் இருவரும் சைக்கிளில் தொடருந்துப் பாதையை கடந்தபோதே இவர்கள் மீது தொடருந்து மோதியுள்ளது.
இதில் காயமடைந்த இருவரும் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட போது குறித்த சிறு வன் உயிரிழந்துள்ளான். இதில் படுகாயமடைந்த மற்றைய சிறுவன் செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.