இரான் அணு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படாது – டிரம்ப்

0
420

தற்போது இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிடம், ஒருபோதும் இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

இரான் பற்றி டிரம்ப் சொன்னது என்ன?

 ஜெருசலேமில் பேசிய டிரம்ப், இரான் அவருக்கு முன்பு அதிபராக இருந்த பாரக் ஒபாமாவுடன் ஒரு “அற்புதமான ஒப்பந்தம்” ஒன்றை போட்டிருந்தது. அந்த ஒப்பந்தம் இரானுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிக்கும் ஒரு வாய்ப்பாகவும் சுபிட்சத்தை வழங்குவதாகவும் இருந்தது என்றார்.

ஆனால் அதற்கு ”நன்றியுடன் இருப்பதற்கு பதிலாக” இரானியர்கள் பயங்கரவாதத்தை ஆதரித்தனர் என்றார் டிரம்ப்.

திங்களன்று பேசிய உரையில் அவர், இரான் ”பெரிய அளவில் நிதி அளித்து, பயங்கரவாதிகள் மற்றும் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் ஆயுதம் வழங்குவது” போன்றவற்றை செய்வதாக குற்றம்சாட்டினார்.

”ஒருபோதும் இரானுக்கு அணுஆயுதங்கள் வழங்கப்படமாட்டாது,” என்று டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவிடம் தெரிவித்தார்.

உலகநாடுகளுடன் 2015ல் செய்த ஒப்பந்தத்தின்படி, இரான் அதன் உறுதியான பொருளாதார நலன்களுக்கு பதிலாக தன்னுடைய அணுசக்தி திட்டத்தில் தடைகளை ஒப்புக் கொண்டது. மேலும் அந்த ஒப்பந்தம் தற்போதும் நீடிக்கின்றது என்று வெள்ளை மாளிகை கடந்த மாதம்கூட தெரிவித்திருந்தது.

2015 ல் உலக நாடுகளுடன் ஒரு அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதிலிருந்து, இரானியர்கள் ”அவர்கள் நினைத்ததை செய்யலாம்” என்று எண்ணியுள்ளனர் என்று டிரம்ப் கூறினார்.

(bbc)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here