பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவுடன் மாவீரர் பணிமனை பிரான்சு நடாத்திய தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் நினைவுசுமந்த உதைபந்தாட்டப்போட்டி மற்றும் துடுப்பெடுத்தாட்டப்போட்டிகள் இன்று (21.05.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 1996 அன்று யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்த கப்டன் பல்லவியின் சகோதரன் ஏற்றி மலர்வணக்கம் செய்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றும் வீரர்கள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர், பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர்,பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள சகிதம் கைலாகுகொடுத்து போட்டிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

தொடர்ந்து போட்டிகள் மாலை வரை விறுவிறுப்பாக இடம்பெற்றதைக் காணமுடிந்தது.
சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரு. கோகுலன் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் மதிஉரைப் பெருமைகள் தொடர்பாக எடுத்துரைத்திருந்ததுடன், அவரின் பெருமைகள் தொடர்பில் சிங்கள தலைமைகள் வியப்படைந்திருந்தமைதொடர்பாகவும் கூறியிருந்தார். இவரது நினைவாக விளையாட்டுப்போட்டிகள் இடம்பெறுவது பெருமைக்குரிய விடயம் எனவும் கூறியிருந்தார். இது வீரர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
நிறைவாக வெற்றிபெற்ற வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.
போட்டிகளில் உதைபந்தாட்டத்தில் 16 அணிகளும் துடுப்பெடுத்தாட்டத்தில் 19 அணிகளும் பங்குபற்றிச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிறைவாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்சார்பில்
அனைவருக்கும் நன்றி உரைக்கப்பட்டது.

வெற்றிபெற்ற கழகங்களதும் வீரர்களதும் பெயர் விபரம் வருமாறு:-
உதைபந்தாட்டம் (13 வயதின் கீழ்)
1ஆம் இடம்: யாழ்டன் விளையாட்டுக்கழகம்
2 ஆம் இடம்: காந்தி ஜீ விளையாட்டுக் கழகம்
3; ஆம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம 93
இறுதி ஆட்ட நாயகன்: கஜீவன் (யாழ்டன் வி.க.)
1ஆம் இடம்: யாழ்டன் விளையாட்டுக்கழகம்
2 ஆம் இடம்: காந்தி ஜீ விளையாட்டுக் கழகம்
3; ஆம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம 93
இறுதி ஆட்ட நாயகன்: கஜீவன் (யாழ்டன் வி.க.)
உதைபந்தாட்டம் (15 வயதின் கீழ்)
1ஆம் இடம்: நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம்
2 ஆம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம 93; ஏ
3 ஆம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம 93 பி
சிறந்த விளையாட்டு வீரன்: ஆகாஷ் (த.வி.க. 93)
1ஆம் இடம்: நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம்
2 ஆம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம 93; ஏ
3 ஆம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம 93 பி
சிறந்த விளையாட்டு வீரன்: ஆகாஷ் (த.வி.க. 93)
ஜெனிஸ்ரன்(நல்லூர்ஸ்தான்)
இறுதி ஆட்ட நாயகன்: தனுசன் (நல்லூர்ஸ்தான்)
இறுதி ஆட்ட நாயகன்: தனுசன் (நல்லூர்ஸ்தான்)
உதைபந்தாட்டம் (16 வயதின் மேல்)
1ஆம் இடம்: விண்மீன்கள் விளையாட்டுக்கழகம்
2ஆம் இடம்: நல்லூர்ஸ்தான் வி.க.
3ஆம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93
1ஆம் இடம்: விண்மீன்கள் விளையாட்டுக்கழகம்
2ஆம் இடம்: நல்லூர்ஸ்தான் வி.க.
3ஆம் இடம்: தமிழர் விளையாட்டுக்கழகம் 93
சிறந்த விளையாட்டு வீரன்: பானுசன்(விண்மீன்கள்.வி.க.)
ஜஸ்மின்(நல்லூர்ஸ்தான்)
இறுதி ஆட்ட நாயகன்: அபிமன் (விண்மீன்கள் வி.க.)
ஜஸ்மின்(நல்லூர்ஸ்தான்)
இறுதி ஆட்ட நாயகன்: அபிமன் (விண்மீன்கள் வி.க.)
துடுப்பெடுத்தாட்டம்
1ஆம் இடம்: அரியாலை ஐக்கிய கழகம்
2ஆம் இடம்: யாழ்டன் வி.க.
3ஆம் இடம்: அரியாலை AUCF.
1ஆம் இடம்: அரியாலை ஐக்கிய கழகம்
2ஆம் இடம்: யாழ்டன் வி.க.
3ஆம் இடம்: அரியாலை AUCF.
இறுதி ஆட்ட நாயகன்: சபிந்தன் (அரியாலை வி.க.)
சிறந்த துடுப்பாட்ட வீரன்: ராஜ் (ஸ்கந்தா வி.க.)
தொடராட்ட நாயகன் : கஜன் (யாழ்டன் வி.க.)
சிறந்த பந்துவீச்சாளன்: ராஜா (அரியாலை வி.க.)
சிறந்த துடுப்பாட்ட வீரன்: ராஜ் (ஸ்கந்தா வி.க.)
தொடராட்ட நாயகன் : கஜன் (யாழ்டன் வி.க.)
சிறந்த பந்துவீச்சாளன்: ராஜா (அரியாலை வி.க.)
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)