வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளிலிருந்து உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது.
ஹசல பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரின் உடலம் முன்னர் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ஐந்து மாடிக் கட்டிடம் கடந்த 18 ஆம் திகதி சரிந்து வீழ்ந்தது. உடனடியாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவத்தில் காயமடைந்த 24 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சரிந்து வீழ்ந்த கட்டிடம் சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டது எனவும் அதன் உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே.அனுர நேற்று தெரிவித்தார்.
இயற்கை கால்வாய்க்கு அருகில் இவ்வாறான கட்டிடங்களுக்கு கட்டாயமாக அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் கால்வாய் ஓரம் வரை அனுமதியின்றி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் பத்தாயிரம் சட்ட விரோத கட்டங்கள் இருப்பதாக தெரிவிக்க படுகிறது.