புதிய காத்தான்குடி 3ஆம் குறிச்சி சபீனா வீதியைச் சேர்ந்த 4 வயதான பாத்திமா ஹிபா எனும் சிறுமி டெங்கு காய்ச்சலினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
குறித்த சிறுமி டெங்கு காய்ச்சலினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடியில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை மூன்று சிறுமிகள் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.