இலங்கை என்னும் நாட்டின் இறைமையான குடிமக்கள் தான் தமிழ் மக்கள். அதன் பின் வந்த சிங்களர் இலங்கை தீவினை கபடத்தனமாக தமதாக்கி பின்னர் அந்நியர்களுக்கு தாரைவார்த்து மட்டுமல்லாது அவர்களின் அடிவருடிகளாக செயற்பட்டு 1948 ல் தமது கைகளுக்குள்ளும் ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டு வந்து அந்நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக புறந்தள்ளியது.
புறந்தள்ளியவர்களுககெதிராக சினங்கொண்டெழுந்த தமிழரை பூண்டோடு அழிக்கும் செயற்பாட்டை தொடராக செய்து வந்தது சிங்கள பேரினவாத அரசு. இதனால்தான் தமிழர்கள் தாம் இழந்த உரிமையை மீண்டும் பெற்றெடுக்கும் வரை நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழமுடியாது என்கின்ற நிலையில் தான் தொடர்ந்து தமது உரிமைக்காக சனநாயகவழியில் போராடிவருகின்றனர்.
சிங்கள் தேசத்தின் சுதந்திர நாள் ஈழத்தமிழ் மக்களின் துயரநாள் என்பதை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் தொடர் போராட்டங்களை சர்வதேசமெங்கும் வாழ்தமிழீழ மக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பிரான்சில் சிறீலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாக தமிழீழ மக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
பிரெஞ்சு மொழியிலும், சிங்கள மொழியிலும் உரையாற்றியதுடன், துண்டுப்பிரசுரங்களையும் வழங்கியிருந்தனர். இதில் உரையாற்றிய தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர், மற்றும் தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர்கள் இலங்கைத்தீவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் மனதில் தமிழர்கள் பற்றிய எந்த மாற்றத்திற்கும் இடமில்லை என்பதையும் சர்வதேசம் உண்மை நிலையை தெரிந்து கொண்டு குறிப்பாக பிரித்தானியா தனது கலனித்து ஆட்சிக்கு முன்பாக எவ்வாறு இலங்கைத்தீவில் ஆட்சி அதிகாரம் இருந்ததோ அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தமது இழந்த உரிமைக்காக தொடர்ந்து சனநாயக வழியில் தமது போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்றும் கூறியிருந்தனர்.