அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஹபீஸ் நசீரின் பெயரை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிபாரிசு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டம் தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவவதாகவும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாய்ந்தமருது பிராதான வீதியில் அமைச்சர் ரவூப் ஹக்கிமின் கொடும்பாவியை எரிப்பதற்கு முயற்சித்த போதும் பொலிஸாரின் முயற்சியனால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
இதேவேளை அட்டாளைச்சேனையிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கான துண்டுப்பிரசுரங்கள் ஆதரவாளர்களினால் வழங்கப்பட்ட போதிலும் அது பின்னர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.