பிரான்சில் முள்ளிவாய்க்கால் 8 ஆவது ஆண்டை முன்னிட்டு பிரான்சு பாராளுமன்றப் பகுதியில் நினைவெழுச்சி நிகழ்வு இன்று (16.05.02017) செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலைவரை இந்நிகழ்வு இடம்பெற்றது. பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் காட்சிகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வின் நிறைவில் கருத்துரைத்த பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள், வரும் வியாழக்கிழமை 18.05.2017 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரும் அலையெனத் திரண்டு உங்கள் கண்டனத்தை சர்வதேசத்தின் முன்தெரிவிக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.