நாளை மே 18 முள்ளிவாய்க்கால் 8 வது ஆண்டு நினைவு கூரலும் சர்வதேசத்திடம் நீதிகேட்டுச் செல்லும் பேரணியும் இடம் பெறவுள்ளது. இனஅழிப்பின் மே மாதமும் வாரங்களிலும் தமிழின அழிப்பின் சாட்சிபடுத்தலும் , பரப்புரை செயற்பாடுகளும் பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அதன் உப கட்டமைப்புகளும் தமிழீழ மக்கள் பேரவை தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் இளையவர்கள் என தமது செயற்பாடுகளை முற்கூட்டியே இனஅழிப்பு வாரத்தில் கவனயீர்ப்புப் போராட்டமாக நடாத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை (15) தமிழர்கள் அதிகமாக பங்குபற்றும் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லாச்செப்பேல் பகுதியிலும், அதற்கு அடுத்ததாக தமிழர்கள் அதிகம் வாழும் லாக்கூர்னோவ் பகுதியிலும் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினர் பறையொலி எழுப்பி முள்ளிவாய்க்கால் பாடல்கள் பாடி தமிழீழ மக்களை நீதிக்கான பேரணிக்கு அழைப்பு விடுத்தனர். அத்துடன் அனைத்து வர்த்தக நிலையங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடிகளும் பலூன்களும் கட்டப்பட்டன. துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் மூதாளர் இல்லத்தைச் சேர்ந்தவர்களும், மக்களும் பிரான்சு பாராளுமன்றத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையின் நிழற்படங்கள் கொண்ட கவனயீர்ப்புப் போராட்டத்தை நேற்று (16) நடாத்தியிருந்தனர்.
இன்று (17.05.2017) பகல் 14.00 மணிக்கு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சார்சல் நகரத்தில் தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த மாவீரர்கள் நினைவாகவும், தமிழின படுகொலைக்குள்ளான தமிழீழ மக்களின் நினைவாக நாட்டப்பட்ட நினைவு நடுகல் திரைநீக்கம் 95 மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சார்சல் மாநகசபை முதல்வரும் மாநகரசபையும் சார்சல் பிராங்கோ தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் செய்யப்படுகின்றது.
மே 18 முள்ளிவாய்க்கால் அதிஉச்ச நாள் இன அழிப்பு நாளில் காலை 9.00 மணிக்கு செவரோன் மாநகரத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவுகல் முன்பாகவும், 11.00 மணிக்கு கிளிச்சி மாநகரத்தில் பிரான்சு பட்டணிக்கெதிரான அமைப்பின் 17 உறுப்பினர்கள் மூதூரில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக நிறுவப்பட்ட நினைவுக்கல்லின் முன்பாகவும் நினைவுச்சுடர்கள் ஏற்றப்படும். பகல் 14.00 மணிக்கு லாச்சப்பேலிருந்து நீதிக்கான பேரணியும் நடைபெறவுள்ளது.
Home
புலத்துச்செய்திகள் பிரான்சில் தமிழின அழிப்பின், அதிஉச்ச நாள் மே 18 முள்ளிவாய்க்கால் 8 வது ஆண்டின் நினைவு...