இந்தவருடம் நேற்றைய தினம் வரை சிறீலங்காவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 44,623 வரை அதிகரித்துள்ளதுடன், 115 மரணங்களும் இடம்பெற்றுள்ளன.
2014 ஆம் ஆண்டு 47,246 டெங்கு நோயாளர்களும் 97 மரணங்களும் பதிவாகியிருந்தது. எனினும் 2015 ஆம் ஆண்டு 29,777 நோயாளிகளும் 60 மரணங்களுமாக குறைப்பதற்கு சுகாதார மற்றும் நோய் தடுப்பு பிரிவுக்கு முடியுமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,150 வரை அதிகரித்துள்ளதுடன், 90 மரண சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
நோயாளர்கள் மற்றும் நுளம்புக்குடம்பிகள் தொடர்பான தரவுகளுக்கேற்ப கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடர் பிரதேசங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.
இந்த ஆபத்தான நிலைமையைக் கவனத்திற்கொண்டு டெங்கு பரவுவதை உச்ச அளவில் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய உடனடித் தீர்வுகள் குறித்து டெங்கு ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.