சிங்கள சிறீலங்கா பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி ஜேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 6 வது நாளான நேற்று (15) காலை 10.00 மணிக்கு Dortmund நகரிலும் மாலை 5.00 மணிக்கு Münster நகரிலும் ஊடறுத்து சென்று அங்குள்ள பல்லின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் முகமாக கண்காட்சி பதாதைகளை அமைத்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் குறிகிய கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
Dortmund நகர முதல்வர் அலுவலகத்துக்கு சென்று ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றது/ நடந்துகொண்டிருக்கின்றது இனவழிப்பு என அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனுக்கையளிக்கப்பட்டது. இன்று காலை Bielefeld நகரிலும் மாலை Hannover நகருக்கும் பயணித்து சென்று நாளை புதன்கிழமை ( 17) ஜேர்மன் தலைநகருக்கு விழிப்புணர்வு ஊர்திப் பயணம் சென்றடையவுள்ளது.