எமது தலைமைகள் கதிரைகளை அலங் கரிக்கவே இருக்கிறார்கள் !

0
152


வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவு களின் போராட்டம் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், வடக்கு கிழக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று கிளிநொச்சியில் கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்களை எட்டவுள்ள நிலையில், அடுத்த கட்ட போராட்டங்கள் தொடர்பில் இதன்போது ஆலோசிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் சிறீலங்கா அரசுக்கு பல்வேறு நெருக்குதல்களை கொடுக்கக் கூடிய வகை யில் போராட்டங்களை வலுவடைய செய்யவே இம்முக்கிய கலந்துரையாடல் இடம் பெற்றதாகவும் அவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.
அரசியல்வாதிகளை நம்பி பல ஆண்டுகளை வீணடித்து நம்பிக்கை இழந்த நிலையிலே நாம் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். எமது பிள்ளைகளை போராடி மீட்க வேண்டிய நிலைக்கு நாம் நம்பிய அரசியல்வாதிகள் எம்மை தள்ளியுள்ளனர். இந்நிலையிலேயே நாம் எதிர்வரும் நாட்களில் எவ்வாறு இப்போராட்டத்தினை மேற்கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டோம் என உறவுகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய பிரதமரின் வருகையின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட டம் தொடர்பில் அரசியல் தலைமைகளால் வலுவாக எடுத்து கூறப்பட்டதா என அவர்களிடம் வினவியபோது,
எமது தலைமைகள் கதிரைகளை அலங் கரிக்கவே இருக்கிறார்களேயன்றி எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கல்ல.
அவ்வாறு எமது பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டதாக நாம் அறியவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். எமது போராட்டத்திற்கு பதவி ஆசைகளை விட்டுவிட்டு கதிரைகளில் அமர்ந்திருப்பவர்களானாலும் சரி, வெளியில் நின்று அரசியல் பேசுபவர்களானாலும் சரி எமமுடன் வீதியில் இறங்கி போராடுங்கள் என தாம் அவர்களை கேட் டுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here