தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான் வேண்டத் தகாதவன் ஆகிவிட்டேன். அதனாலேயே இந்தியத் தலைமை அமைச்சரைச் சந்திக்கும் நிகழ்வுக்குக் கூட்டமைப்பினர் என்னை அழைக்கவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
கொழும்பிற்கு வருகைதந்த இந்தியத் தலைமை அமைச்சர் மோடியை அரச தலைவர் வழங்கிய விருந்துபசாரத்தில் சந்தித்த நீங்கள், இந்திய பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது பங்குகொள்ளவில்லையா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான் வேண்டாத ஆள் என்பதால் எனக்கு இந்தியத் தலைமை அமைச்சரைக் கூட்டமைப்பினர் சந்திக்கும் நிகழ்வுக்கு என்னை அழைக்கவில்லை. இந்தச் சந்திப்புத் தொடர்பான தகவல்களை அதில் பங்கு கொள்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் அவர்களுக்கு வேண்டாத ஆள்தானே-என்றார்.