ஐ.எஸ். போராளிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜோர்தானிய விமானி கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து ஜோர்தான், பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் உட்பட இருவருக்கு புதன்கிழமை அதிகாலை மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது.
‘விசுவாசிகளின் இதயங்களை குணப்படுத்தல்’ என்ற தலைப்பில் ஐ.எஸ். போராளிகளால் வெளியிடப்பட்ட பிந்திய வீடியோ காட்சியில், ஜோர்தானிய விமானியான மோஸ் அல் கஸஸ்பெஹ் செம்மஞ்சள் நிற ஆடை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு கூண்டில் அடைக்கப்படுகிறார்.
தொடர்ந்து அந்தக் கூண்டின் மீது பெற்றோல் போன்ற எரிபொருளை ஊற்றி அதற்கு தீ வைக்கப்படுகிறது.
இதனையடுத்து நிராதரவாக நின்ற விமானியை தீ முழுமையாக சூழ்ந்து கொள்கிறது.
அதன் பின் போராளிகள், எரிந்து கருகிய அந்தக் கூண்டின் மீது செங்கற்கள் உள்ளடங்கலானவற்றை வாரி இறைத்த பின்னர் அந்தக் கூண்டை புல்டோஸர் உபகரணத்தால் தட்டையாக்குகின்றனர்.
ஐ.எஸ். போராளிகளால் வெளியிடப்பட்ட இந்த வீடியோ காட்சி கச்சிதமாக படமாக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருந்தது.
மேற்படி 22 நிமிட வீடியோ காட்சி வெளியிடப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள் சர்வதேச நேரப்படி காலை 4.40 மணிக்கு ஈராக்கைச் சேர்ந்த இரு போராளிகளுக்கு ஜோர்தானால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றை நடத்த முயன்ற வேளை பிடிபட்ட பெண் தற்கொலைக்குண்டுதாரியான சஜிடா அல் – றிஷாவி மற்றும் அல் – கொய்தா செயற்பாட்டாளர் ஸியத் கார்போலி ஆகியோருக்கே ஜோர்தான் மரணதண்டனையே நிறைவேற்றியுள்ளது.
ஜோர்தானிய விமானியான கஸஸ்பெஹ் கடந்த டிசம்பர் மாதம் ஐ.எஸ் போராளிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் சிரியாவில் வான் தாக்குதலில் ஈடுபட்ட வேளை அவரது விமானம் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து அவர் போராளிகளால் பிடிக்கப்பட்டார்.
அவரையும் ஜப்பானிய பணயக்கைதியான கென்ஜி கொடோவையும் விடுதலை செய்வதற்கு தமது போராளிக்குழுவை சேர்ந்த பெண் தற்கொலைக் குண்டுதாரியான- றிஷாவி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ.எஸ்.போராளிகள் இறுதியாக நிபந்தனை விதித்திருந்தனர். கென்ஜி கொடோ 4 நாட்களுக்கு முன் போராளிகளால் கொல்லப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு ஜோர்தானிய தலைநகர் அம்மானில் 60 பேர் பலியாவதற்கு காரணமான தாக்குதலில் வகித்த வகிபாகத்துக்காக சஜிடாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு உள்ளான கார்போலி மீது 2008 ஆம் ஆண்டு ஜோர்தானிய பிரஜையொருவரை படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
ஜோர்தானிய விமானி ஐ.எஸ்.போராளிகளால் கொல்லப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ஜோர்தான், மேற்படி படுகொலைக்கு பூமியே அதிரும் பதிலடி கொடுக்கப்படவுள்ளதாக ஆரம்பத்தில் சூளுரைத்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த ஜோர்தானிய மன்னர் அப்துல் -லாஹ், கஸஸ்பெஹ்ஹின் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்னர் இந்தப் படுகொலை வீடியோ காட்சி வெளியானதையடுத்து அமெரிக்க பயணத்தை இடைநடுவில் பூர்த்தி செய்து கொண்டு தாய்நாடு திரும்பியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் மேற்படி படுகொலைக்கு கண்டனம் தெரி வித்துள்ளார். இந்த படுகொலை தொடர் பில் ஜோர்தானிய ஆயுதப் படையின ரின் பேச்சாளர் மம் டோஹ் அல்–அமெரி அந்நாட்டு தொலைக் காட்சியில் உரையாற் றுகையில், உயிரிழந்த விமானிக்கு இராணு வம் அஞ்சலி செலுத்துவதுடன் அவரால் சிந்தப்பட்ட குருதிக்கு இராணுவம் பழி தீர்க்கவுள்ளதாக சூளுரைத்திருந்தார்.