பாரிசின் புறநகர்ப் பகுதியான சார்சல் பகுதியில் கார்ஜ் சார்சல் மாநகரசபையால் அமைக்கப்பட்டுள்ள தமிழீழ மாவீரர் நினைவாக முதல் நினைவுத் தூபி எதிர்வரும் 17.05.2017 புதன்கிழமை பகல் 14.00 மணிக்கு நெல்சன் மண்டேலா விளையாட்டு மைதானத்தில் திறந்துவைக்கப்பட உள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சார்சல் மாநகர முதல்வரும், நகரசபை உறுப்பினர்களும், பிரான்சு அரசியல் பிரமுகர்களும் வருகைதர உள்ளனர்.
தாயகக் கனவுடன் வீரச்சாவினைத் தழுவிய எம் தேசப் புதல்வர் நினைவாக நடைபெறும்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கார்ஜ் சார்சல் தமிழ்ச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.