வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தாயாகிய கலைச்செல்வன் பவானி (வயது 39) என்பவரே அவரது வீடில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வராவார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்தப் பெண்ணின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில் நேற்று (12) மதியம் சடலம் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று மாலை 5.30 மணியளவில் நெடுங்கேணி இந்து மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.