தமிழர் படுகொலை வாரம் செம்மணி மண்ணில் ஆரம்பம்!

0
362

தாயகப் பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் தமிழர் படுகொலை வாரம் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.

தமிழ் படுகொலை வாரத்தின் முதலாம்நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் 600 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்ட செம்மணி மண்ணில் இன்று காலை இடம்பெற்றது.

தாயகப் பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வில் வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர்   சீ.தவராசா, மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன்,   கே.என். விந்தன் கனகரத்தினம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் மே 18 ஆம் திகதி முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி வருகைதந்தால் அவரின் வருகைக்கு எதிர்ப்பு  தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்படும்  என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தாயகப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக முறையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சீ.தவராசா வலியுறுத்தியுள்ளார்.

இறுதி யுத்ததின்போது முள்ளியவாய்க்கால் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மரணித்த 500  பொது மக்களை நினைவுகூரும் வகையில் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்களை நிறுவும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை பதிவு செய்வதில் புலனாய்வு பிரிவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here