விசுமடுவில் 19 வயது மாணவன் பலி : எலிக்காச்சல் காரணமா?

0
330

முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எம். சதீஸ்குமார் என்பவரே காச்சல் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனிற்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்படுவதாகவும், மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே கீழ் குறிப்பிடப்படும் அறிகுறிகள் காணப்படும் போதும் உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உடம்பு உளைச்சல் அல்லது உடல் நோதல், தலையிடி, உடல் களைப்பு, அல்லது உடல் அலுப்பு போன்ற பிரதான நோய் அறிகுறிகளுடன் கண் சிவத்தல், வாந்தி கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் வெளியேறுவது குறைதல் ஆகிய நோய் அறிகுறிகள் இருக்கலாம். ஆனால் சில நோயாளிகளுக்கு எந்த ஒரு குணம் குறியும் தென்படாது. எனவே உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய சிகிசை பெறவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here