தமிழ் பேசும் மக்களுடன் உரிமைகளைச் சமமாகப் பகிர்ந்து கொள்ள ஆணை கேட்டது கூட்டு அரசு. இப்போது அரமைப்பு மாற்றத்தைப் பேரினவாத நரித் தந்திரங்கள் மூலம் உருக்குலைத்து தமிழருக்கு அடிமைச் சாசனம் எழுத முற்படுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு தெரிவித்தார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் ஊடகக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்ததாவது,
கிடைப்பதைப் பெற்று அடிமையாக வாழ்வதை விட தமிழினம் போராடி வாழ்வதே மேல். விடுதலை வேண்டிப் போராடியவர்கள் உலகில் என்றும் தோற்றதில்லை. . தென்சூடான், கிழக்குத்திமோர், மொண்டிநீக்குரோ கொசோவோ போன்ற நாடுகள் இனப்படுகொலைகளின் விளிம்புகளில் வெற்றி கொண்ட நாடுகள்.
பழைய வரலாற்றை சிங்கள தேசமும் பேரினவாத அரசுகளும் மீட்டிப் பார்க்க வேண்டும். இந்த நாட்டில் தமிழர் தமது உரிமைகளை சமமாக அனுபவிக்க உரித்துடையவர்கள். தமது பாதுகாப்பு, தமது காணி உரிமை, தமது அபிவிருத்தி ஆகியவற்றை உறுதிப்படுத்திய தம்மை தாமே ஆழும் உரிமை தமிழ் பேசும் முஸ்லீம்க ளுக்கும் வழங்கப்பட வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.- என்றார்.