61வது நாளாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்புப்போராட்டம் !

0
188


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்பில் உரிய பதிலை சிறீலங்காஅரசு வழங்காதநிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன்பாக மேற்கொண்டு வரும் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 61வது நாளாக தொடர்கின்றது.
இறுதியுத்தத்தின் போது சிறீலங்கா படையினரிடம் சரணடைந்த மற்றும் ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்பட்ட தங்களுடைய உறவுகள் தொடர்பில் உரிய பதிலை கடந்த எட்டு ஆண்டுகளாக சிறீலங்கா அரசு வழங்காத நிலையில் அவ ர்களது உறவினர்களால் பல்வேறு போராட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டன.
இந்தப்போராட்டங்களைத் தொடர்ந்து தற்போது முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர்கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 61வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here