வவுனியா – ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட அம்மிவைத்தான் கிராமத்தில் நேற்றிரவு புகுந்த யானை மூன்று வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராமத்திற்குள் புகுந்த தனி யானை ஒன்று அங்கிருந்த தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களை நாசப்படுத்தியதுடன், வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளது.
இதனால் அங்கிருந்தவர்கள் யானையை துரத்துவதற்கு முற்பட்ட போது அவர்களை துரத்திய யானை அங்கிருந்த மூன்று வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொட்டகை வீடொன்றில் உணவுத்தேவைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் நாசப்படுத்தியுள்ளது.
எனினும் வீட்டில் இருந்தவர்கள் அருகிலுள்ள பற்றைகளுக்குள் ஒளிந்து கொண்டும் வீட்டை விட்டு ஓடியமையினாலும் உயிர் தப்பியுள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.