முள்ளிவாய்க்கால் படுகொலை வடமாகாணசபையினால் நினைவு கூரப்படும்!

0
621

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்டமக்களின் நினைவு நாள் இந்த வருடமும் எதிர்வரும் 18ம் திகதி வடமாகாணசபையினால் நினைவு கூருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதற்காக எதிர்வரும் 9ம்திகதி பேசப்படும் எனவும் வ டமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.

2009ம் ஆண்டு இறுதிப்போரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களுடைய நினைவு நாள் வருடாந்தம் மே-18ம் திகதி வட மாகாண சபையினால்முள்ளிவாய்க்கால் மண்ணில் பலத்த நெருக்கடிகளுக்கும் மத்தியில் நினைவு கூரப்பட்டுவருகின்றது.

இதேபோல் இந்த ஆ ண்டும் எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவு நாள் நினைவு கூரல் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம் தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விடயம் தொடர்பாக மேலும் அவர்குறிப்பிடுகையில்,

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களின்நினைவாக வருடாந்தம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடைபெற்ற மண்ணில் மே-18ம் திகதி நினைவு கூரல் நிகழ்வு நடத்தி வருகின்றோம்.

இதேபோல்இந்த வருடமும் மே-18ம் திகதி நினைவு கூரல் நடத்தப்படும். இது தொடர்பாக முதலமைச்சருக்குசில விடயங்கள் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ளவடமாகாணசபை அமர்வின் பின்னர் இந்த நினைவுகூரல் நிகழ்வு தொடர்பாக பேசுவதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்.

கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் நினைவுகூரல்நிகழ்வு நடக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here