முல்லைத்தீவு மாவட்ட செயலக வாகனம் புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கெப் வாகனம், புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த பார ஊர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு பார ஊர்தியின் சாரதியும் காயமடைந்துள்ளார்.
ஜயன்கோவிலடி முள்ளியவளையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ராஜராஜன் (வயது 41) என்பவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி பணியாளர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த நான்கு பேரில் மூவர் புத்தளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் சிறிலங்கா காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் .