பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலின் இறுதிச்சுற்று தேர்தல் நாளை மறுதினம் (07.05.2017) நடைபெற உள்ளது.
முதல் சுற்று தேர்தல் முடிவுகள் வெளியாகியதில் இருந்து இறுதிச் சுற்றில் போட்டியிடு இரண்டு வேட்பாளர்களில் வலதுசாரி தீவிரவாத கட்சி வேட்பாளர் மரி லெப்பனை விட் மக்ரோன் தொடர்ந்து முன்னணியிலேயே இருக்கின்றார்.
இறுதியாக இன்று காலை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் திரு மக்ரோன் 62 வீத மான வாக்குகளையும் மரி லெப்பன் 38 வீதமான வாக்குகளையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (03.05.2017) அன்று இரவு இரண்டு போட்டியாளர்களுக்கு இடையே நடைபெற்ற நேரடி விவாதத்தின் பின்னர் மக்ரோனுக்கான ஆதரவு அதிகரித்து கொண்டு செல்கின்றது.
இந்த கருத்துக்கணிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மக்ரோனுக்கு வாக்களிப்பவர்களில் பெரும்பான்மையானோர் மரிலெப்பனுக்கு எதிராகவே வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். பிரான்சில் குடியுரிமை பெற்று வாக்குரிமை உடைய குடியேற்றவாதிகளில் பெரும்பாலானோர் முதல் சுற்று தேர்தலில் வாக்களிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. பிரான்சு குடியுரிமை பெற்றுள்ள ஈழத்தமிழர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப் படுகின்றது.