முல்லைத்தீவில் வகை தொகையின்றி அழிக்கப்படும் இயற்கை வளங்கள்!

0
275

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கைச் சூழலைப் பாதிக்கும் வகையில் இயற்கை வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றன.

இதனைத்தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட பகுதியின் அதிகளவான இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் இங்குள்ள வளங்கள் வகை தொகையின்றி அழிக்கப்படுகின்றன. அதாவது சட்டத்திற்கு முரணான வகையில் மணல், கிரவல் அகழ்வுகள் காடழிப்புக்கள் என பெறுமதி வாய்ந்த வளங்கள் அழிக்கப்படுகின்றன.

இதனைவிட முறையற்ற விதத்திலான அனுமதிகள் வழங்கப்பட்டும் இவ்வாறு வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன எனவும் இதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பிரதேச மக்களும் பொது அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரவல் அகழ்வுகள், மணல் அகழ்வுகளுக்கான அனுமதிகள் மாவட்டத்தை சேர்ந்த தனி நபர்களுக்கோ அல்லது அமைப்புக்களுக்கோ வழங்கப்படாது தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றன.

SAMSUNG CAMERA PICTURES

ஒட்டுசுட்டான், துணுக்காய் போன்ற பகுதிகளிலும் பெருமளவான கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இதனைவிட வவுனிக்குளம் மற்றும் ஏனைய குளங்களுக்கு நீரைச் சேர்க்கும் ஆறுகள் துண்டாடப்பட்டு மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான அனுமதிகள் யாவும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெருமளவான வளங்களை அழிக்கும் வகையில் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட அனுமதிகளால் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இவற்றை உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு இவ்வாறான அனுமதிகளை கிராம மட்ட அமைப்புக்களுக்கு வழங்கி வளங்களை பாதுகாக்க உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், பொது அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here