வட்டக்கச்சியில் கணவனின் பிரிவை தாங்காது மனைவி உயிரிழப்பு!

0
168
வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வட்டக்கச்சியைச் சேர்ந்த கவிதா கலைச்செல்வன் (வயது28) என்ற இளம் குடும்பப் பெண்ணே நேற்று முன்தினம் முதலாம் திகதி அதிகாலை வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்ப ட்டவராவார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பூநகரி பொலிஸ் பரிசோதகர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
முன்னதாக இவரது கணவர் கணேசமூர்த்தி கலைச்செல்வன் (வயது 34) என்பவர் கடந்த 28ஆம் திகதி வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கணவனின் மரணம் தொடர்பில் விரக்தியடைந்த மனைவி கவிதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்ற பதில் நீதவான் மற்றும் கிளிநொச்சி திடீர் மரண விசாரணை அதிகாரி வி.திருலோகமூர்த்தி  ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here