யாழ். சித்தன்கேணியில் வயோதிபர்களை தாக்கி பணம், நகை கொள்ளை!

0
170
உள்ள வீடொன்றில் நுழைந்த சிலர் அங்கிருந்த இரு வயோதிபர்களை தாக்கி வீட்டில் இருந்த பெறுமதியான பணம், நகை மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இச்சம்பவத்தின் போது  காயமடைந்த இரு வயோதிபர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இச் சம்பவமானது நேற்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரி வுக்குட்பட்ட சித்தன்கேணி பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
நேற்று அதிகாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டச்சு வீதி சித்தன்கேணி பகுதியில் வசித்து வரும் வயதான இருவரின் வீட்டுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தியு ள்ளனர். இவ்வாறு தாக்குதல் நடத்திய பின்னர் அவர்களது வீட்டில் இருந்த பெறுமதியான நகைகள், பணம் மற்றும் ஏனைய பொருட்களை திருவடிச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டில் இருந்த வயதான பெண்ணினது காதில் இருந்த தோடுகள் போன்றவற்றையும் அறுத்து எடுத்து சென்றுள்ளனர். இச் சம்பவத்தையடுத்து படுகாயமடைந்த குறித்த இருவரையும் அயல வர்கள் சங்கானை வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தனர். இதன்படி சிதம்பரநாதன் தேவஞானி, மற்றும் சின்னையா சிதம்பரநாதன் ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த வட்டுக் கோட்டை பொலிஸார் நேற்றுக்காலை சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களை கொண்டு சென்று விசாரணைகளை நடத்தியிருந்த னர். இதன்போது சம்பவம் நடைபெற்ற வீட் டிற்கு அண்மையாக இருந்த நபரொருவரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here