காணி­ வி­டு­விப்பை வலி­யு­றுத்தி முழங்­காவில் இர­ணை­மாதா நகர் பகு தியில் போராட்டம்!

0
320


காணி­ வி­டு­விப்பை வலி­யு­றுத்தி முழங்­காவில் இர­ணை­மாதா நகர் பகு தியில் நேற்று முன்­தினம் ஆரம்­பிக்­கப் ­பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளா­கவும் முன்­னெ­டுக்­கப்­ படுகிறது . தமது பூர்­வீக இடத்­திற்குச் செல்­லவும் தங்கி நின்று தொழில் புரி­யவும் அனு­ம­திக்­கு­மாறு கோரி இர ணைத்­ தீவு மக்கள்  போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
கடந்த 1992 ஆம் ஆண்டு வடக்கில் உள்ள தீவு­களில் ஏற்­பட்ட சூழ்­நிலை மாற்றம் மற்றும் போக்­கு­வ­ரத்து தடைகள் கார­ண­மாக தீவக மக்கள் தமது வாழ்­வி­டங்­களை விட்டு முற்­றாக இடம் பெயர்ந்­தனர்.
பின்னர் ஏற்­பட்ட சுமு­க­மான சூழ­லை­ய­டுத்து யாழ். மாவட்­டத்தில் உள்ள தீவு­களில் மக்கள் படிப் ­ப­டி­யாக மீள்­கு­டி­யே­றினர்.
இருப்­பினும் கிளி­நொச்சி மாவட்­டத்தின் இர­ணைத்­தீவு பகு­தியில் இருந்து  வெளி­யேற் ­றப்­பட்ட மக்கள் கடந்த 26 ஆண்­டு­க­ளாக தமது சொந்த நிலத்தில் வாழ்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­ப­டாத நிலையில் வாழ்ந்து வரு­கின்­றனர்.
கிளி­நொச்சி மாவட்­டத்தின் பூந­கரி பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இர­ணை­தீவு எனும் மிகவும் பழமை வாய்ந்த தீவா­னது பல்­வேறு இயற்கை வளங்­க­ளையும் கடல்சார் வளங்­க­ளையும் கொண்­ட­மைந்து காணப்­ப­டு­கின்­றது.
இங்கு பூர்­வீ­க­மாக வாழ்ந்து வந்த சமூகம் கட­லோடும் திற­னையும் கடல் பற்­றிய அறி­வையும் நன்கு கொண்­டி­ருந்­தனர்.
இங்கு வாழ்ந்த மக்கள் கடற்­தொ­ழி­லையே பிர­தான தொழி­லாக கொண்டு வாழ்ந்­த­துடன் ஆண்கள் மட்­டு­மல்­லாது பெண்­களும் கடல்­பற்­றிய அறி­வையும் அனு­ப­வத்­தையும் நிறை­யவே கொண்­டி­ருந்­தனர். அத்­துடன் பெண்­களும் கடற்­தொழில் செய்யும் ஓர் இட­மா­கவும் இருந்­துள்­ளது என தெரிவித்துள்ளனர்.
கடந்த 1992ம் ஆண்டு இர­ணை­தீவில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட 240 குடும்­பங்கள் முழங்­காவில் பகு­தியில் உள்ள இர­ணை­மாதா நகர் என்ற இடத்தில் 140 குடும்­பங்­க­ளுக்கு காணிகள் வழங்­கப் பட்டு குறித்த பகு­தியில் குடி­யேற்­றப்­பட்­டனர்.
இந்­தப்­ப­கு­தியில் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மின்­சார வசதி போக்­கு­வ­ரத்து வச­திகள் என்­பன ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­போதும் மக்கள் தமது சொந்த நிலத்­திற்குச் செல்லும் ஆவலுடனேயே உள்ளனர்.
தற்போது பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவில் சென்று குடியேறி வாழ்வதற்கு 336 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 214 பேர் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here