ஐ.எஸ் அமைப்பால் ஜப்பானை சேர்ந்த மற்றொரு பிணைக்கைதியும் தலை துண்டித்து கொலை!

0
614

jappanஐ.எஸ் பயங்கரவாதிகள் ஜப்பானை சேர்ந்த மற்றொரு பிணைக் கைதியின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக இணையதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ, ஜப்பான் அரசுக்கு ஒரு செய்தி எனத் தொடங்குகிறது.

பிணைக் கைதி கென்ஜி கோடோவும், பயங்கரவாதி ஒருவரும் வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.

கோடோவின் தலையை துண்டிப்பதற்கு முன்பாக, பயங்கரவாதி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை எச்சரித்துள்ளனர்.

ஐ எஸ் ஆயுதாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜப்பானிய பிரஜைகளில் ஏற்கெனவே ஒருவரது தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பான காணொளியொன்று ஆயுதாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்ட இரண்டு பேரையும் விடுவிப்பதற்கு ஐ எஸ் ஆயுததாரிகளால் 200 மில்லியன் அமெரிக்க டொலர் ஜப்பான் அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்தது.

எனினும் பணத்தை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கத்தினால் கோரப்பட்ட 72மணித்தியால கால அவகாசம் நிறைவுபெற்ற நிலையில் சிரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளரை கொலை செய்த காட்சி காணொளியாக வெளியானது.

இந்த காணொளியில் மற்றொரு பணயக் கைதியான கென்ஜி கோடோ உயிருடன் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்த நிலையில்  தற்போது மற்றையவரும் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here