வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 69 வது நாளாகவும் தொடர்கிறது.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் மற்றும் அவசர காலச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமலையிலும் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.