தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு , தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சின் அனுசரணையுடன் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு , வருடாந்தம் நடாத்தும் மேஜர் காந்தரூபன் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி 2017, கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.04.2017) காலை 9.00 மணி தொடக்கம் பாரிசின் புறநகர்பகுதியான செவரோனில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சித்திரைமாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கும் வணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து ,சித்திரை மாதம் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை 01.03.2009 அன்று முள்ளிவாய்க்காலில் வீர்சாவைத்தழுவிய வீரவேங்கை வினிதரனின் சகோதரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மேஜர் காந்தரூபனின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 03.12.2007 அன்று கரிப்பட்டமுறிப்பில் வீரச்சாவைத்தழுவிய வீரவேங்கை யாழ்நம்பியின் சகோதரி ஏற்றி வைத்தார். தொடர்ந்து போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
13 வயதிற்கு கீழ் பிரிவில்
1 ம் இடத்தை காந்திஜி விளையாட்டுக் கழகம்
2 ம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93
3 ம் இடத்தை யாழ்டன் விளையாட்டுக் கழகம்
ஆகியன பெற்றுக் கொண்டன.
சிறந்த விளையாட்டு வீரராக காந்திஜி விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த வானுயன் தெரிவு செய்யப்பட்டார்.
15 வயதின் கீழ் பிரிவில்
1 ம் இடத்தை நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம்,
2 ம் இடத்தை யாழ்டன் விளையாட்டுக்கழகமும்,
3 ம் இடத்தை தமிழர் விளையாட்டுக்கழகம் 93 (வெள்ளை)
ஆகியன பெற்றுக் கொண்டன.
சிறந்த விளையாட்டு வீரராக நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த விபிசன் பெற்றுக் கொண்டார்.
19 வயதின் மேல்
1 ம் இடம் விண்மீன் விளையாட்டுக் கழகமும்,
2 ம் இடம் தமிழர் விளையாட்டுக்கழகம் (வெள்ளை) ம்,
3 ம் இடம் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்
ஆகியன பெற்றுக் கொண்டன.
சிறந்த விளையாட்டு வீரராக விண்மீன் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த கஜி தெரிவு செய்யப்பட்டார்.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு