பாரிசில் மே தின ஊர்வலத்தில் வன்முறை: 4 படையினர் காயம்! பொது உடைமைகளும் சேதம்!!

0
148

இன்று திங்கட்கிழமை, பாரிசில் இடம்பெற்ற மே தின ஊர்வலத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. கலவரம் அடக்கும் படையினரான CRS படையினரில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை நோக்கி பெற்றோல் எரிகுண்டு வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பரிசில், மாலை 3 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Place de la Bastille பகுதியில், பல்வேறு தொழிற்சங்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முகமூடி அணிந்த 150 க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் ஆர்ப்பாட்டத்துக்குள் புகுந்து. கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஊர்வலத்தை கண்காணித்துக்கொண்டிருந்த CRS படையினர் மீது கற்கள் பெற்றோல் எரிகுண்டு வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதன்போது நான்கு CRS படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

வீதியில் காணப்பட்ட பேருந்து தரிப்பிடங்கள் விளம்பர சுவர்கள் அனைத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து நொருக்கப்பட்டன.வேறு வழியின்றி காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி பதில் தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போக செய்தனர்.

குறித்த சம்பவத்தினை அடுத்து வீதி எங்கும் உடைந்த கண்ணாடித் துண்டுகளும் கற்களும் சிதறிக்கிடந்தன. அவற்றுக்கு மத்தியில் தமிழ் மக்களின்  மேதின ஊர்வலம் அமைதியாகச் சென்று பாதுகாப்பான ஓர் இடத்தில் காவல்துறையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் நிறைவடைந்தது. 

(படங்கள்:எரிமலைக்காக பாரிசிலிருந்து பகீர் , யூட்)

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here