கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைப்பெற்ற மாமனிதர்  சிவராமின் நினைவு நிகழ்வு!

0
229

மாமனிதர்  தர்மரட்ணம் சிவராமின் (தராகி) 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கிளிநொச்சி நகரில் உணர்வுபூர்வமாக நடைப்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று மாலை கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

யாழ். ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை, கலைப்பீட இணைப்பாளர் எஸ்.ரகுராம் நினைவுரை நிகழ்த்தினார்.

இதேபோல் யாழ்.ஊடக அமையத்தினால் முதன்முறையாக வழங்கப்பட்ட சிவராம் ஞாபகார்த்த விருது மறைந்த கேலிசித்திர கலைஞன் அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல் இக்கட்டான காலப்பகுதியில் ஊடக பணியாற்றியாற்றியமைக்காக சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் 7 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இவர்களுக்கான விருதுகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்கியிருந்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஊடக அமைப்புக்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தென்னிலங்கை சிங்கள ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here