மாமனிதர் தராகி சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில்!

0
150

மாமனிதர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்)12 ஆவது ஆண்டு நினைவேந்தர் நிகழ்வு இம்முறை கிளிநொச்சி நகரில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

இந்த நிகழ்வு இன்று 29ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில்நடைபெறவுள்ளது.

யாழ்.ஊடாகஅமையத் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்நினைவேந்தல் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தெற்கு ஊடக அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில்,நினைவுரைகளாக’தராகியும் இலங்கையின் பூகோளஅரசியலும்’என்னும்தலைப்பில்யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை,கலைப்பீட இணைப்பாளர்கலாநிதி எஸ்.ரகுராம் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாகத்தில் சிவாராம்’ என்னும் தலைப்பில் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும்,’சிவராமின் கனவு’என்னும் தலைப்பில் மூத்தஊடகவியலாளர் ராதயனும்,’நானும் சிவராமும்’என்ற தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகரும் உரையாற்றவுள்ளனர்.

தமிழர் தாயகத்தில் துணிச்சலுடனும்,ஊடக அறத்துடனும்,செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ்.ஊடக அமையம் இவ்வாண்டு முதல் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கும் தராகிசிவராம் ஞாபகாத்த விருது மறைந்த கேலிச்சித்திரகலைஞரும்,ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்சனுக்கு வழங்கப்படுகின்றது.

இதேவேளை வடக்கு,கிழக்கில் நெருக்கடியானசூழலில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் சர்வதேசதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் விருதுவழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்நிகழ்வில் வைத்து கௌரவிக்கப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here