தமிழ் மக்கள் கணிசமாக வாழும் மாயக்கல்லியில் பௌத்த விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற் கான காணி அளவீடு செய்யும் பணிகள் நேற்று (26)ஆரம்பமாகின.
நேற்றுக்காலை இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு திடீரென வருகை தந்த மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் எஸ்.குணசேகர இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீருடன் கலந்துரையாடினார் பின்னர் மாவட்ட நில அளவை திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்து மாயக்கல்லி பிரதேசத்தில் விகாரைக்கான காணி பிரிக்கும் பணிகள் ஆரம்பமாகின .
இதற்கிடையில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்) கிழக்கு மாகாண சபை அமர்வின்போது மாயக் கல்லி விடம் தொடர்பில் பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் ஆணைக்குழவொன்று நியமிக்கப்ட்டுள்ள நிலையிலே இக்காணி அளவீடு ்சம்பவம் இடம்பெற்றுள்ளது் குறிப்பிடத் தக்கது . வடக்கு கிழக்கில் மக்கள் காணிகளை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்து இருப்பதற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் தமிழர் தாயகத்தில் பௌத்த விகாரை மூலம் ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப் படுகிறது.