கிழக்குக்கு முதலமைச்சர்: முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்கும் என்கிறார் ஹக்கீம்!

0
304

hakkeem1-600x321இன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நியமிக்கும். இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம் இன்று சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும்,கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இங்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்போகின்ற ஆட்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகளையும் இணைத்து ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்.

மக்களுக்கான இந்த நல்லாட்சியில் எல்லாக் கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகள் பூரண ஆதரவை வழங்க முன்வரவேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் எல்லாவிடயங்களையும் 100 நாட்களுக்குள் செய்து விடமுடியாது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் எமது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தி, கட்சிக் கிளைகளை புனரமைத்து நாம் திடமாக வேண்டும். – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here