உலக போரின் ஆரம்பமா? 230,000 அமெரிக்கர்களை வெளியேற டிரம்ப் உத்தரவு!

0
296

வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் வட கொரியா மற்றும் தென் கொரியாவில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது.

அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தாலும் அதை வட கொரியா ஏற்பதாக தெரியவில்லை.

மேலும், எங்களிடம் உள்ள எவுகணையை வைத்து ஒரே அடியில் அமெரிக்காவை தகர்ப்போம் என வட கொரியா எச்சரித்துள்ளது.

இதனிடையில், இந்த வாரம் மீண்டும் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமான அணு ஆயுத சோதனையை நடத்த வட கொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், மூன்றாம் உலக போர் தொடங்கும் என சூசகமாக வட கொரியா தெரிவித்துள்ளது.

இதனிடையில், வட கொரியா மற்றும் தென் கொரியாவில் இருக்கும் 230,000 அமெரிக்கர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்க ராணுவத்துக்கு டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இங்கிருந்து அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவதற்காக அவசரகால பயிற்சிகளை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூன்றாம் உலக போர் பதற்றத்த்தால் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த மூன்று முக்கிய நபர்களை வடகொரியா கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போர் பதற்றம்! உலகை அழிக்கும் குண்டுகளுடன் வடகொரியா: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!!

வடகொரியாவை சீண்டாதீர்கள், அதையும் மீறி சீண்டினால் அவர்களிடம் உலகை அழிக்கும் குண்டுகள் உள்ளதாக அதிகாரபூர்வமற்ற வடகொரியா தூதர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும், வடகொரியா இதை ஏற்க மறுக்கிறது.

இதனால் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை அறிந்த வடகொரியா அமெரிக்காவின் விமான தாங்கி கப்பலை தங்களால் வீழ்த்த முடியும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் ஸ்பேயின் நாட்டைச் சேர்ந்தவரும் வடகொரியாவின் கெளரவ குடிமகனாகிய Alejandro Cao de Benos (43), ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவை யாரும் சீண்ட வேண்டாம் என்றும், அவ்வாறு சீண்டினால் உலகை அழிக்கும் குண்டுகள் அவர்களிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.

Alejandro Cao de Benos வடகொரியாவின் கெளரவ குடிமகன். இவருக்கு வடகொரியாவில் நடக்கும் அனைத்து விடயங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார உறவு வைத்திருக்கும் வடகொரியாவின் சிறப்பு பிரதிநிதியும் இவர் தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர் வடகொரிய அதிபரான Kim Jong-un-வின் அதிகாரப்பூர்வமற்ற தூதர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் ஸ்பேயினின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், யாரும் வடகொரியாவை தொட வேண்டாம். அவர்களை தொட்டால் அவர்கள் துப்பாக்கி மற்றும் ஏவுகணைகள் மூலம் தங்களை பாதுகாத்து கொள்வார்கள்.

அவர்களிடம் Thermonuclear குண்டு இருக்கிறது, அதில் மூன்று குண்டுகள் போட்டால் உலகமே அழிந்து விடும் என்று கூறியுள்ளார்.

மேலும் சீனா, அமெரிக்காவுடன் இணைந்து போரிட நேர்ந்தால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்று சீனாவுக்கு எச்சரிக்கை வேறு விடுத்துள்ளார்.

Kim Jong-un கடந்த 2012- ஆம் ஆண்டிலிருந்த தனது அணு ஆயுதவலிமையை பலப்படுத்தி வருவதாகவும், வடகொரிய மக்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள்.

அவர்கள் மிகவும் அமைதியான முறையில் வாழ்கிறார்கள், சமூக மோதல்கள் இல்லை, தெருவில் மக்கள் தூங்கவில்லை, இது ஒரு வாழ்க்கை முறை, அனைவரும் ஒரு பெரிய கூட்டுறவு இயக்கத்தில் வேலை செய்வதாக, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை மறைமுகமாக தாக்கியுள்ளார்.

ஏனெனில் அமெரிக்காவில் போராட்டம், வன்முறை மற்றும் சமூக மோதல்கள், பிற நாடுகளில் தெருக்களில் தூங்குதல் போன்று உள்ளனர். அதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.

இதனால் வடகொரியாவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம், மீறினால் உங்களுக்குத் தான் இழப்பு என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here