பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா நேற்று (31) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இவர் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார்.
இது தவிர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் சந்தித்து பொதுநலவாயத்தின் தொடர்பிலும் மற்றும் நாட்டின் தேசிய முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் மோல்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாடு தொடர்பில் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க தான் தீர்மானித்துள்ளதாகவும் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.