பிரான்சின் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன் பிரகாரம் முன்னணியில் இருக்கும் இரண்டு வேட்பாளர்கள் எதிர்வரும் 07.05.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் சுற்றில் பேட்டியிடுவார்கள். இம்முறை இரண்டாம் சுற்றில் EMA கட்சி வேட்பாளர் மக்ரோன் அவர்களும் , தீவிர வலதுசாரிகட்சி வேட்பாளர் ஜோமரி லெப்பனும் போட்டியிட உள்ளனர்.
இவ்விதமே 2002 ஆம் ஆண்டு இடம் பெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாம் சுற்றில் வலதுசாரிக்கட்சி வேட்பாளர் ஜக்சிராக்கும் தற்போது இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகி இருக்கும் ஜோமரி லெப்பனின் தந்தையார் மரி லெப்பனும் தெரிவாகி போட்டியிட்டார்கள் .
2002 ஆம் ஆண்டு நடைபெற்றற இரண்டாம் சுற்றில் வலதுசாரி கட்சி வேட்பாளர் ஜக்சிராக் 82.21 வீத வாக்குகளையும், தீவிர வலதுசாரிக்கட்சி வேட்பாளர் மரி லெப்பன் 17.79 வீத வாக்குகளையே பெற்றிருந்தார்கள் . இம் முறை இரண்டாம் சுற்றில் அவ்விதமான தேர்தல் முடிவே எதிர்வு கூறப்படுகின்றது.