முல்லைத்தீவு, வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதிகளை உள்ளடக்கி 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமை அகற்றக்கோரியும் வட்டு வாகல் மற்றும் நந்திக்கடலில் மக்களின் மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக தடைகளை ஏற்ப டுத்தியுள்ள கடற்படையினரை விலகக்கோரியும் நேற்று வட்டுவாகல் பகுதி மக்கள் அடையாள உண்ணாவிரதத்தையும் பேரணியையும் நடத்தியுள்ளனர்.
மூன்றுநாள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இந்த மக்கள் நேற்று (21) வெள்ளிகி ழமை காலை 9.30 மணி முதல் வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்கிருந்து பேரணியாக வட்டுவாகல் பாலம் ஊடாக முல்லைத்தீவு நகரை இவர்கள் சென்றடைந்தனர்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கபட்டுள்ள மகாத்மாகாந்தியின் சிலையினை மக்கள் திறந்து வைத்ததுடன் அந்த இடத்தி லேயே அடையாள உண்ணாவிரத்தத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத் தியர் சி.சிவமோகனும் இணைத்துக்கொண்டிருந்தார்.
பின்னர் பிற்பகல் 3.30மணியளவில் உண்ணாவிரதம் இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிராணவநாதனிடம் அரசாங்க அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் ஒப்படைப்பதற்கான மகஜர்களை இந்த மக்கள் கையளித்தனர்.
பதினான்கு நாட்களுக்குள் தமது சொந்த நிலங்களை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் சாதக மான பதிலை தரவேண்டும் எனவும் அவ்வாறு பதினான்கு நாட்களுக்கு முடிவு தமக்கு கிடைக்க வில்லை எனில் தமது போராட்டம் தொடர்போராட்டமாக வெடிக்கும் எனவும் இந்த மக்கள் மேலதிக அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி மற்றும் வட்டுவாகல் பகுதியை உள்ளடக்கி பொதுமக்களுக்குச் சொந்தமான 397 ஏக்கர்காணி மற்றும் அரச காணிகள் உட்பட 617 ஏக்கர் வரையான காணியை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சிறீலங்கா கடற்படையினர் ஆக்கிரமித்து பாரிய கடற் படைத்தளமொன்றை அமைத்துள்ளதுடன் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியிலும் கடற் தொழிலை மேற்கொள்வதற்கு மீனவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்தே இந்த போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.