துன்னாலை வேம்படிப் பகுதியில் நேற்று (21) மாலை 5.00 மணியளவில் குழு மோதல் ஏற்பட்டதில் காயமடைந்த ஐவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கத்திகள், பொல்லுகள், போத்தல்களுடன் இரு தரப்பினரும் இறங்கி மோதலில் ஈடுபட்டனர். இதில் இருவர் படுகாயங்களுக் கும் மூவர் சிறுகாயங்களிற்கும் உள்ளாகினர்.
இச் சம்பவத்தை அடுத்து நெல்லியடிப் பகுதி எங்கும் போத்தல்கள் உடைக்கப்பட்டு சிதறிக் காணப்பட்டது.
அதேவேளை இம் மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் பிரதாப் (வயது 25) அமுதராசா யோகராசா (வயது 27) மற்றும் குணராஜ் இராஜேஸ்வரி (வயது 43) அஜந்தன் அபிசன் (வயது 12), மதன் கஜீவன் (வயது 10) ஆகியோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர்.