சிறீலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் எங்கள் காணிகளில் சொகுசாக இருக்கின்றனர். காணி களை விடுவிப்பார் கள் என்பதில் நம்பிக்கை குறைவாகவே உள்ளது. இன்று காணி களை விடு விப்பார்கள் என்றே எதிர்பார்த்தோம். ஏமாற்றமாக இருக்கின்றது. போராடாமல் இருந்திருந்தால் ஜென்மத்துக்கும் காணிக்குள்ளே சென்றிருக்கவே முடியாது.
கேப்பாபிலவில் சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ள காணிகளைப் பார்வையிட்ட பின்னர் மக்கள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
எங்களது காணிகள் அடையாளம் காண முடியாதவாறு ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன. வீடுகள், கட்டடங்கள், தேவாலயம் எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. எங்களது தென்னைகளிலிருந்து விழும் தேங்காய்கள் குவியல்களாகப் படையினர் குவித்து வைத்துள்ளனர். அவர்கள் அதனைப் பயன்படுத் துகின்றார்கள் என்பது அங்கிருக்கின்ற அடையாளங்களைப் பார்க்கும்போது புரிகின்றது.
சொகுசாக – ஆடம்பரமாகக் கட்டடங்களைக் கட்டியுள்ளனர். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த இடங்களிலேயே அப்படியான கட்டடங்கள் இருக்கின்றன. அதனை அவர்கள் விடுவிப்பார்கள் என்று சொல்லமுடியாது. எமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை குறைவாகவே உள்ளது.
நாங்கள் போராடியிருக்காவிட்டால், காணிகளுக்குள் ஜென்மத்துக்கும் சென்றிருக்க முடியாது – என்றனர்.