1987 ஆம் ஆண்டு யூ லை மாதம் 29 ஆம் திகதியன்று இலங்கை -இந்திய ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டதையடுத்து, இந்திய அமைதிகாக்கும் படையினர் அடுத்த வந்த நாள்களில் இலங் கைக்கு வந்து தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தனர். சமாதானத்துக்கான அமைதிப்படையில் சீக்கியர்கள், குஜராத்தியர், கேரளத்தவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பல மாநிலத்தவர் க ளும் அடங்கியிருந்தனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்ட போது தமிழ்மக் களில் பெரும்பாலானோர் மகிழ்ச்சியடைந்தனர். இந்திய அமைதிப்படையினர் தமிழ்ப்பிரதே சங்களில் நிறுத்தப்பட்டி ருந்ததனால் தமது பாதுகாப்புக் குறித்துக் தமிழ் மக்களுக்கு ஓரளவு ஆறு தலாகவுமிருந்தது.
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் பூர்வீக மாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், அப்போதைய ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியின்போது சிறீலங்காப் படையினரால் நூற்றுக்கணக் கில் படுகொலை செய்யப்பட்டும், பல தமிழ்க் கிரா மங்கள் அழிக்கப்பட்டும் கொண்டிருந்தன.
கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழர்கள் நிம்மதியிழந்து மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகினர். பல பாரம்பரிய தமிழ்க்கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் அடித்துத் துரத்தப்பட்டனர். கிழக்கு மாகாணத்திலிருந்து அகதிகளாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளியேறினர்.
இதன் காரணமாக அந்தவேளையில், தமிழ் மக்களின் பாதுகாப்்பு கேள்விக் குறியாகியது. இந்தியப்படைகள் தமிழ் மக்களின் காவலர்களாக வந்ததையடுத்து, அகதிகளாக வெளியேறிய கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் இந்திய அமை திப்படைகளை நம்பி மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருந்த னர். ஆனால் தமிழர்களின் நிம்மதி நீடிக்கவில்லை. இந்திய அமைதிப்படையி னர் அதனை விரும்பியிருக்கவுமில்லை.
தியாகதீபம் திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில் சாகும்வரை உணவு ஒறுப்பில் ஈடுபட்டு உயிர் துறந்ததைத் தொடர்ந்து இந் தியப்படையினருக்கும் தமிழீழ விடு தலைப்புலிகளுக்கு மிடையில் முறுகல் நிலை அதிகரித்துக் காணப்பட்டது. தமிழ் மக்களின் அச்சமும் பலமடங்காகியது.
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்திய அமைதிப்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கு மிடையே மோதல் ஆரம்பமாகியது. அமைதியை நிலைநாட்ட வந்த இந்தியப்படையினர் தங்க ளது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.
இரண்டு தரப்பினர்களுக்கும் இடையில் தொடர்ந்து இடம் பெற்ற மோதல்களில் அப்பாவித் தமிழர்கள் பலர் படுகொலைசெய்யப்பட்டனர். காரணமே இல்லாமல் தமிழர்களின் உயிர்கள் இந்தியப் படையினரால் பறிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டனர். அந்தக் கால கட்டத்தில் சுமார் இரண்டாயிரதிற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வரையில் இந்தியப்படை யினரால் கொல்லப்பட்டனர் ..
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படையினருக்கும் 1987, 1988ஆம் ஆண்டுக்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த இரண்டாவது ஈழப் போரின்போது, இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்பதற்கும் தொடர்ச்சியான அறப்போராட்டங்களை நடத்துவதற்கும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அன்னை யர் முன்னணி முடிவு செய்திருந்தது.
இந்திய அமைதிப்படையினரின் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் போகவே, பல பெண்கள் அறவழியில் போராடுவதற்கான முடிவை எடுத்திருந்தனர். இந்தியப்படையினர் தமிழ் மக்கள் மீது தொடுத்த போரை நிறுத்துமாறு கோரி, உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அன்னையர் முன்னணி ஆயத்தமான வேளையில், 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதி அன்னையர் முன்னணியினரை அழைத்து இந்திய அமைதிப்படை உயர் அதிகாரிகள் பேச் சுக்களை மேற்கொண்டபோதிலும் அதில் இணக்கப்பாடெதுவும் எட்டப்படவில்லை.
அன்றைய பேச்சுக்களால் எந்தவிதமான பயனும் ஏற்படாமல் போகவே, சாகும்வரை உணவு ஒறுப்புப் போராட்டத்தைக் கடைப்பிடிப்பது என்ற முடிவை அன்னையர் முன்னணி எடுத்த போது இந்தப் போராட்டத்தில் யார் பங்கேற்பது? என்ற தெரிவை குலுக்கல் முறை மூலம் மேற்்கொண்ட போது உணவு ஒறுப்புப் போராட்டத்தில் பங்கு கொள்ள அனனம்மா டேவிட் என்ற பெண்ணே தெரிவு செய்யப்பட்டார்.
சாகும் வரை உணவு ஒறுப்புப் போராட்டத்தை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் 1988 பெப்ரவரி 14 ஆம் திகதி டேவிட் அன்னம்மா என்ற அந்தப்பெண்மணி ஆரம்பித்தபோது, இந்தியப்படையினர் அவரைத் தொடர்ந்து உணவு ஒறுப்புப் போராட்டத்தை மேற்கொள்ள விடாது கடத்திச் சென்றனர்.
டேவிட் அன்னம்மாவினால் தனது போராட்டத்தைத் தொடர முடிய வில்லை. சாகும்வரை உணவு ஒறுப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு அன்னையர் முன்னணிக்குப் பல நெருக்கடி களை இந்தியப் படையினர் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
டேவிட் அன்னம்மா கடத்தப்பட்டவுடன் மற்றொரு அன்னையான பூபதி தனது உணவு ஒறுப்புப் போராட்டத்தை 1988 மார்ச் 19ஆம் திகதியன்று உறுதியான மனத்திடத்துடன் ஆரம்பித்தார். போராட்டத்தில்அவர் குதிப்பதற்கு முன்னர் முன் எச்சரிக்கையாக, ‘‘சுயவிருப்போடு உணவு ஒறுப்பில் ஈடுபடுகிறேன்.
எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, பிள்ளைகளோ என்னை வைத்தியசா லையில் சேர்க்கக் கூடாது’’ என்று கடிதமெழுதிக் கையெழுத்திட்டதோடு, இந்தியப் படையினர் உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி சண்டையை நிறுத்த வேண்டும். புலிகளுடன் பேச்சுக்களை நடத்தித் தீர்வு காணவேண்டும். என்ற இரண்டு கோரிக்கையை முன்வைத்து தனது உணவு ஒறுப்புப் போராட்டத்தை தொடங்கினார்.
1988 ஆம் ஆண்டுக்கு முன்னர் அன்னை பூபதி தனது இரண்டு பிள்ளைகளை இலங்கைப்படையினர் சுட்டுக் கொன்ற தாக்கத்திலிருந்து மீள முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்தவர். தமிழினத்தின் உரிமைகளுக்காக தன்னால் முடிந்த பணியாகக் கருதியே உணவு ஒறுப்புப் போராட்டத்தில் குதித்தார்.
1988 மார்ச் மாதம் 19ஆம் திகதியன்று அவர் ஆரம்பித்திருந்த உணவு ஒறுப்புப் போராட்டத்தை இந்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை. அன்னை பூபதியும் தனது உறுதியான நிலைப்பாட்டி லிருந்து விலகாதிருந்தார். அன்னை பூபதி நீர் மட்டுமே அருந்தி உணவு ஒறுப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தார்.
ஏப்ரல்மாதம் 19 ஆம் திகதி காலைப் பொழுது விடிகின்றது. என்றுமில்லாதவாறு மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோயில் பகுதி ஒரு வித சோகம் சூழ்ந்து பரபரப்பாகின்றது. மக்களும் நேரம் செல்லச் செல்ல அன்னைபூபதியின் போராட்ட மேடையைச ் சுற்றி கவலையுடன் குழுமி நிற்கின்றனர். அன்னை பூபதியின் உடல் நிலை குறித்ததான சோகம் கிராமம் முழுவதும் வெகுவேகமாகப் பரவியது.
தாம் வரித்த கொள்கையினின்றும் பின்வாங்காத அன்னை பூபதி அன்றைய தினமே அதாவது 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதியன்று தனது உயிரைத்துறந்து மீளாத்துயிலில் ஆழ்ந்தார் .
தியாகத்தின் உருவமான அன்னைபூபதி தமிழினத்துக்காக உழைத்து உயிர்நீத்து இன்று 31 ஆண்டுகளாகிவிட்டன.
ஒரு பெண்ணாக, தாயாக, ஓர் இல்லத்தரிசியாக மட்டுமன்றி, இவற்றையெல்லாம் கடந்து தனது தேசத்தின் விடுதலைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ஓர் தியாக வரலாற்றின் பதிவாகிய அன்னை பூபதி, தமிழர் களின் நெஞ்சங்களில் என்றும் நிறைவாக நிலைத்து நிற்பார்.