ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ. எஸ். பி. வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்குமா ?

0
182

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலு­கையை இலங்கை மீண்டும் பெற்­றுக்­கொள்­வது தொடர்­பான முக்­கி­ய­மான கூட்­டத்­தொடர் இன்று பெல்­ஜியம் – பிரசெல்ஸ் நகரில் ஆரம்­ப­மா கின்­றது. இதன் போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர் மட்ட குழுவின் மதிப்­பீட்டு அறிக்கை பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
மனித உரி­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் கார­ண­மாக நீக்­கப்­பட்ட ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை மீண்டும் மே மாதத்தில் இருந்து கிடைப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ள­தாக அர­சாங்கம் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளது.
ஜீ.எஸ்.பி வரிச்சலு­கையை மீண்டும் இலங்­கைக்கு வழங்­கு­வது தொடர்பில் மதிப்­பீடு செய்­வ­தற்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உயர் மட்ட தொழில்­நுட்ப மதிப்­பீட்டு குழு கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டது.
இந்த குழு­வி­னரால் இலங்கை தொடர்பில் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை இன்று புதன் கிழமை பெல்­ஜியம் – பிரசெல்ஸ் நகரில் இடம்­பெ­று­கின்ற ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் விசேட கூட்டத் தொடரில் சமர்ப்­பிக்­கப்­பட உள்­ளது.
இலங்­கையின் தற்­போ­தைய பொரு­ளா­தார ஸ்திர­த்தன்மை, மனித உரி­மைகள் மற்றும் தொழி­லா­ளர்­களின் உரிமை உள்­ளிட்ட விவ­கா­ரங்கள் தொடர்பில் இலங்­கையின் முன்­னேற்­றங்­களை மதிப்­பீடு செய்வதற்கே ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தொழில்நுட்ப குழுவினர் இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here