சிறீலங்கா கொலன்னாவ, மீதோட்டமுல்லையிலுள்ள குப்பைமேடு சரிந்து விழுந்ததில் இடிபாடுகளினுள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 50 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதில் 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 7 பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.