கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் கறுப்புப் பட்டியணிந்து இன்று (14) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய புதுவருட தினத்தை ஒரு துக்கதினமாக அறிவித்துள்ள மக்கள் கறுப்பு ஆடையுடன் கறுப்பு பட்டியணிந்து, தொலைந்த தமது உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எமது உறவுகள் குறித்து தெரிய வராமல் தாம் எந்த கொண்டட்டத்தையும் கொண்டாடப் போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று 54ஆவது நாளாக காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்மை குறிபிடத்தக்கது .
இதேவேளை 46 வது நாளாக கேப்பாப்புலவில் தமது சொந்த நிலங்களை மீட்பதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் மக்கலும் புதுவருடப்பிறப்பை கறுப்பு நாளாக தமது எதிர்ப்பை வெளிபடுத்தி வருகின்றனர்.