மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை சிறீலங்காவில் காணப் படுவதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு, பன்னாட்டு மனித உரிமைகள் அமைப் புக்கள் கடிதம் அனுப்பி வைத்துள்ளன.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அந்த அமைப்புக் கள் கோரியுள்ளன. இந்தக் கடிதத்தின் பிரதி சிறீலங்கா அரசின் அரச தலைவர் மைத்திரிபால சிறி சேனவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவில் அரச சார்பற்ற அமைப்புக்களை அச்சுறுத்தும், பழிவாங்கும் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக மனித உரிமைகள் பணியாளர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் தலைவர்களிற்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்படுகின்றது. வட பகுதியிலும் இந்த நிலமை இருக்கின்றது.
இலங்கையைச் சேர்ந்த இரு மனித உரிமைகள் பணியாளர்களான சுனந்த தேசப்பிரிய மற்றும் நிமால்கா பெர்ணாண்டோ மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்துச் சுட்டிக்காட்ட விரும் புகின்றோம் என்று மனித உரிமை அமைப்புகள் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அண்மைய அமர்விற்குப் பின்னர் குறிப்பிட்ட இரு மனித உரிமை பணியாளர்களும் மிக மோசமான அவதூறு பரப்புரைகளை எதிர்கொண்டுள்ளனர் எனவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Home
ஈழச்செய்திகள் மீண்டும் அரச சார்பற்ற அமைப்புக்களை அச்சுறுத்தும், பழிவாங்கும் கலாசாரம் !