கேப்பாபுலவில் 44 நாட்களாக தொடரும் போராட்டம் , தீர்வுக்கோரி மனு கையளிப்பு..!

0
152

கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் அதனை விடுவித்து சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி இன்றுடன் 44 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு சிறீலங்கா இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
43வது நாளான நேற்றையதினம் இதுவரை தமது சொந்த நிலங்களை கோரி தாம் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு அரசாங்கத்தால் உத்தோயோகபூர்வமாக எந்த பதிலும் நேரடியாக தமக்கு வழங்கப்படவில்லை எனவும் அரசாங்க அதிபரோ பிரதேச செயலரோ இதுவரையில் தம்மை திரும்பிக்கூட பார்க்கவில்லை எனவும் அரசின் அறிவிப்பாக எதையும் தமக்கு அரச அதிபர் வழங்கவில்லை எனவும் தெரிவித்து நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு சென்று தமது போராட்டத்துக்கு இதுவரையில் என்ன பதில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது என வினவியும் விரைவில் நல்ல முடிவை தருமாறு கோரியும் மனு  ஒன்றினை அரசாங்க அதிபர் பிரணவநாதனிடம் கையளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here