பிரான்சில் சிறப்புற இடம்பெற்ற தாம் தீம் தக திமி தா பரதவிழா

0
313

பிரான்சு மண்ணில் வாழ்ந்து வரும் பரத நாட்டிய மாணவர்களினது திறனை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களது திறனை வெளிக்காட்டும் முகமாகவும் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பினர் 4 வது தடவையாக நடாத் திய தாம் தீம் தகதிமி தா நடன நிகழ்வு 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான செவரோன் மாநகரத்தில் இடம் பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக தமிழீழ தாய்மண்ணின் விடுதலைக்காக தம்முயிரை ஈகம் செய்தவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
ஈகைச்சுடரினை 14.03.2009 ல் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட லெப்.கேணல் குறளமுதனின் சகோதரர் எற்றி வைத்து மலர் வணக்கம் செய்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கினை நிகழ்வின் பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட சங்கீத பரம்பரையும், பல மிருதங்க கலைஞர்களை புலம்பெயர் மண்ணில் உருவாக்கி, எமது தேசக்குழந்தைகளின் பல அரங்கேற்ற நிகழ்வுகளிலும், பரீட்சைகளிலும், பலஆண்டுகளாக தேச விடுதலைக்காகவும், அதன் வலுவுக்கும் கலைரீதியாக பங்காற்றி வரும் மிருதங்க வித்துவான் மதிப்புக்குரிய ச. பிரணவநாதன் ஆசிரியர் அவர்களும், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. பாலகுமார் அவர்களும், தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. நிதர்சன் அவர்கள் , தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் திரு. பாலசுந்தரம் அவர்கள், திரு. து. மேத்தா அவர்கள், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. காணிக்கைநாதன் அவர்கள், மற்றும் தமிழ்சங்கக்கூட்டமைப்பின் முக்கிய நிர்வாக உறுப்பினர்களான திரு. விசுவநாதன்அவர்கள், திரு. பரா அவர்கள், திருமதி. கலாஜோதி அவர்கள், கோகுலதாஸ் அவர்கள், செவரோன் மாநகர தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. அலெக்ஸ் அவர்கள், ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி பொறுப்பாளர் திரு. ரூபன் அவர்களும் ஏற்றி வைத்தனர். வரவேற்புரையை தொடர்ந்து.
• நடன ஆசிரியை. திருமதி . றொணி செல்வராஜா அவர்களின் ( திரான்சி தமிழ்ச்சோலை ) மாணவர்களின் புஸ்பாஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
• நடன ஆசிரியை. திருமதி .சுகிதா சசீதரன் அவர்களின் மாணவர்கள் ( தாராதி நடனாலயம் ) லஸ்மி ஸ்துதி நடனமும்.
• நடன ஆசிரியை. திருமதி .கஸ்தூரி யெகதீபன், அவர்களின் மாணவர்கள் ( சுமித்திரா பரத நாட்டிய ஆலயம் ) ஜதீஸ்வரம் நடனமும்
• நடன ஆசிரியை. திருமதி .றெமின்ரா ஜோர்ஜ் அவர்களின் மாணவர்கள் ( புளொமெனில் தமிழ்ச்சோலை ) முரளீதரகௌதம் நடனமும்.
• நடன ஆசிரியை. திருமதி .மோகனரூபி தில்லைரூபன் அவர்களின் மாணவர்கள் ( ஆதிபராசக்தி கலைப் பள்ளி ) அலை பாயுதே கண்ணன் நடனமும்.
• நடன ஆசிரியை. திருமதி .துஸ்யாந்தினி யூலியன் ஜெயசீலன் அவர்களின் மாணவர்கள் ( கலை அருவி மன்றம்; ) கீர்த்தனம்;.
• நடன ஆசிரியை. திருமதி .பிரேமராணி மகேஸ்வரன் அவர்களின் மாணவர்கள் ( பொண்டி தமிழ்ச்சோலை ) தாளஜதி.
• நடன ஆசிரியை. திருமதி .இராஜலிங்கம் மஞ்சுளா அவர்களின் மாணவர்கள் (பொபினி தமிழ்ச்சோலை) FUSION
• நடன ஆசிரியை. திருமதி .சுகிதா சசீதரன் அவர்களின் மாணவர்கள் ( கொலம்பஸ் தமிழ்ச்சோலை) ஸ்வரஜதி
• நடன ஆசிரியை. திருமதி .சுகுணாவதி மனோகரன் அவர்களின் மாணவர்கள் ( நமசிவாய நர்த்தனாலயம் ) கீர்த்தனை
• நடன ஆசிரியை. திருமதி .சார்மிளி சிவலிங்கநாதன் அவர்களின் மாணவர்கள் ( நாட்டியாஞ்சலி கலைக்கல்லூரி ) கீர்த்தனம்
• நடன ஆசிரியை. திருமதி .வினோதா செந்தூரன் அவர்களின் மாணவர்கள் ( செல் தமிழ்ச்சோலை ) (கிருஸ்ணலீலை) நாட்டிய நடனத்தையும்,
• நடன ஆசிரியை. திருமதி .தனுசா மகேந்திரராஜா அவர்களின் மாணவர்கள் ( செவ்றோன் தமிழ்ச்சோலை) கீர்த்தனை
• நடன ஆசிரியை. திருமதி .மோகனரூபி தில்லைரூபன் அவர்களின் மாணவர்கள் ( குசன்வீல் தமிழ்ச்சோலை ) ஆசைமுகம் மறந்து பாடலுக்கான நடனத்தையும்
• நடன ஆசிரியை. திருமதி .றோனி செல்வராஜ்அவர்களின் மாணவர்கள் ( திரான்சி தமிழ்ச்சோலை) கீர்த்தனம்
• நடன ஆசிரியை. திருமதி .துஸ்ந்தினி யூலியன் ஜெயசீலன் அவர்களின் மாணவர்கள் (கலை அருவி மன்றம்;) மழை நடனத்தையும்.
• நடன ஆசிரியை. திருமதி .செலினா மகேஸ்வரன் அவர்களின் மாணவர்கள் ( நாட்டிய சாஸ்திரா) திருப்புகள்
• நடன ஆசிரியை. திருமதி .றோனி செல்வராஜ்அவர்களின் மாணவர்கள் ( சேர்ஜிதமிழ்ச்சோலை ) அம்மன் நடனமும்
• நடன ஆசிரியை. திருமதி .சுகுணாவதி மனோகரன் அவர்களின் மாணவர்கள் ( நமசிவாய நர்த்தனாலயம் ) கீர்த்தனை
• நடன ஆசிரியை. திருமதி .அனுசா மணிவண்ணன் அவர்களின் மாணவர்கள் ( சோதியா கலைக் கல்லூரி ) தில்லானா ( மோகன ராகத்தில் அமைந்த பாடலுக்கும் நடனத்தையும் வழங்கியிருந்தனர்.

பிரதம விருந்தினர் உரையை ஜேர்மன் நாட்டிலிருந்து வந்த மிருதங்க வித்துவான் ஆசிரியர். திரு. சண்முகரட்ணம் பிரணவநாதன் அவர்கள் ஆற்றியிருந்தார். கலைரீதியாக பல ஆண்டுகள் ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் தனது பங்கு இருந்து வந்ததும் அதன் காரணமாக ஒவ்வொரு நாடுகளில் எமது மண்ணின் கலைவளர்ச்சியை பார்த்து வருவதாகவும் தற்பொழுது பிரான்சு மண்ணில் உள்ள கலைகளும், மாணவர்களின் வளர்ச்சியும் முதன்மை நிலையில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது என்று கூறினார்.
சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய செயற்பாட்டாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். ஒவ்வொரு துறைகளில் எமது குழந்தைகள் சிறப்பானவர்களாக வளர்ந்து வருவதற்கு காரணமாக இருப்பவர்கள் ஆசிரியர்களும், பெற்றோர்களும், அதற்கு உறுதுணையாக ஒவ்வொரு மாநகரங்களிலும் சட்டபூர்வமாக செயற்பட்டு வருகின்ற சங்கங்களும் அந்தச்சங்கங்களின் பொறுப்பில் உள்ளவர்களின் உழைப்பும், அதனை நேர்த்தியாக செயற்படுத்த பக்கபலமாக இருந்து வருகின்ற தேசக்கட்டமைப்புகள் செயற்பாடுகளும் தேவைகள் அர்ப்பணிப்பான அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் காலத்தின் தேவைகருதிய அரசியல் செயற்பாடுகள் அதன் தேவைகள் பற்றியும் கூறியிருந்தார்.
கலைரீதியாக செயற்பாடுகள் கர்நாடக சங்கீத தமிழிசைக்காக இசைதுளிர் விருதுக்கான கர்நாடக சங்கீதப்போட்டிகளும், தாயகவிடுதலைப்பாடல்களுக்கான சங்கொலி விருதுக்கான போட்டிகளும், பரதநாட்டியத்திற்கான நிகழ்வு தகதிமிதா பரதநிகழ்வும், தாயக விடுதலை பாடல்களுக்கான நடன நிகழ்வுக்காக வன்னிமயில் விருதுக்கான நிகழ்வும், கிராமிய நடனத்திற்காக ஊரகப்பேரொளி விருதுக்கான போட்டி நிகழ்வுகள் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் நெறிப்படுத்தலுடனும், ஆதரவுடனும் நடைபெற்று வருகின்றது என்பதையும் தெரியப்படுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் சார்பாக திரு. காணிக்கை நாதன் அவர்களும் கலைரீதியான பிள்ளைகளின் வளர்ச்சி பற்றியும் தொடர்ந்து அவர்களை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு எல்லோருக்கும் உரியது என்பதையும் பற்றியும் உரையாற்றியிருந்தார். நன்றியுரையை தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான திருமதி. கலாNஐhதி கோகுலதாஸ் அவர்கள் வழங்கியிருந்தார்.
பரதநாட்டியத்தின்; மீதான ஓவ்வொரு ஆசிரியர்களின் வெளிப்பாடுகள் ஒன்றை விட்டு ஒன்று மிஞ்சியதாக காணக்கூடியதாக இருந்தது. இவ் பரத நிகழ்வில் 150 வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பரத நாட்டியத்துடனும், கிராமியத்துடனும் தமிழர் பாரம்பரிய நடனநிகழ்வுகளில் தாயக விடுதலைப்பாடற் போட்டிகளில் பிரான்சு வாழ் எமது தேசநடனக்குழந்தைகள் பல திறமைகளையும், சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். இதற்கு பலமாகவிருந்து எமது குழந்தைகளை அழகிய நடனகலைச்சிற்பங்களாக உருவாக்குவதில் அல்லும் பகலும் மண், மொழி, தமிழன் என்ற பற்றுதலுடன் பாடுபட்டு வரும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். இதற்கு மேடையமைத்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்து குழந்தைகளின் திறன்களை வெளிக்கொண்டு வந்து அவர்களின் திறன்களுக்கு வழிசமைத்து கொடுக்கும் செயற்பாடுகளைச் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அதன் உப கட்டமைப்புகளும் செய்து வருகின்றன. தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஆதரவுடன் நடாத்திய பரதநாட்டியத்திற்கே உரிய நிகழ்வான தாம் தீம் தக திமி தா மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. நிகழ்வுகள் யாவும் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு நிறைவு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here