ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 2017.

0
714

பிரான்சு தேசத்தில் வாழும் தமிழ்க்கலைக் குழந்தைகளுக்கு தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் ஆண்டு தோறும் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு என்ற செயற்பாட்டினை அனைத்துலக தமிழ்க்கலை நிறுவனத்தின் (ITTA ) ஆதரவுடன் செய்து வருகின்றனர். 2017ம் ஆண்டு ஆற்றுகைத்தரத்திற்கு தெரிவாகியுள்ள மாணவ மாணவிகளுக்கான தேர்வு 08.04.2017 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சார்சல் என்னும் பிரதேசத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது
ஆரம்ப நிகழ்வாக காலை 10.30 மணிக்கு அகவணக்கம் செய்யப்பட்டு மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. மங்கள விளக்கினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு. மகேஸ் அவர்கள், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமாரன் அவர்கள், தமிழ்ச்சோலை தலைமைப்பணியக கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. காணிக்கை நாதன் இவர்களுடன் அன்றைய கலைத்தேர்வில் நடுவர்களாக கடமையாற்ற வந்திருந்த நடன ஆசிரியர் திருமதி. கௌசல்யா ஆனந்தராசா அவர்கள், குரலிசை ஆசிரியர் திரு. ஜெயசோதி அவர்கள், மிருதங்க வித்துவான் திரு. பிரணவநாதன் அவர்கள், இவர்களுடன் நடுவர்கள் திருமதி. அமலி சுரேஸ்குமார் அவர்கள், திருமதி சுபாசினி ஆனந்தவதனன் அவர்கள், திருமதி. சாமினி சந்திரகுமார் அவர்கள் ஆகியோர் எற்றி வைத்திருந்தனர்.
இத்தேர்வில் வாய்ப்பாட்டு (குரலிசை) ஆசிரியர். திருமதி சுரேந்திரன் தேவமனோகரி அவர்களின் மாணவி செல்வி. மயூரி வேலுப்பிள்ளை அவர்கள்,
மிருதங்கம் : ஆசிரியர் திரு. மரியநாயகம் கட்சன் அவர்களின் மாணவர்கள்
செல்வன். கருணாகரன் சாரங்கன், செல்வன் செல்வராசா நிரூசன், செல்வன் செல்வக்குமாரன் வினோசாந் ஆகியோரும்.
நடன ஆசிரியர் : தனுசா மகேந்திரராசா அவர்களின் மாணவி செல்வி. சுவேதிகா சந்திரபாலன்
நடனம்: நடனஆசிரியர் திருமதி. nஐயரஞ்சனி இராசேந்திரகுமார் அவர்களின் மாணவி செல்வி. அனித்தா புஸ்பராசா அவர்களும்.
நடனஆசிரியர் திருமதி . தில்லைரூபன் மோகனரூபி அவர்களின் மாணவி செல்வி. சுவேத்திக்கா முத்துராஐh அவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக நடன ஆற்றுகை தேர்வும், அதனைத் தொடர்ந்து குரலிசைக்கான தேர்வும், மிருதங்கத்திற்கான தேர்வுகளும் இடம் பெற்றன.
இவர்களுக்கான பக்கவாத்தியங்களையும், குரலிசைகளை பிரபல்யமான சங்கீத வித்துவான்களும், பக்கவாத்திய கலைஞர்களும் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முனைவர். சுயம்பு கரிகரன் அவர்கள் (நோர்வே) சங்கீத பூசணம் திரு. க. சேயோன் அவர்கள் (பிரான்சு), குரலிசைசெல்வன். செல்வன். நிரூசன் செயசோதி அவர்கள் (சுவிற்சலாந்து), செல்வி. சங்கீத கலாஜோதி செல்வி. நிலானி செல்வராஜா அவர்கள் (பிரான்சு), ஆகியோர் குரலிசை வழங்க மிருதங்கம் திரு. பிரதாப் இராகவேந்திரா அவர்கள், மிருதங்க ஆசிரியர். திரு. பிலிப் அன்றூ அவர்கள், வயலின் இசையை நுண்கலைமாமணி தர்மீகா முரளிதரன் அவர்களும், செல்வன். பரமேஸ்வரலிங்கம் பிரசாத் அவர்களும் வழங்கியிருந்தனர்.
ஒவ்வொரு மாணவர்களும் தமது துறையில் கற்ற அனைத்து விடயங்களை தமக்கு கொடுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அவற்றை ஒப்புவித்து பரீட்சை நடுவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றிருந்தனர். நிகழ்வின் சிறப்புரையை அனைத்துலக தமிழ்க்கலைத்தேர்வு ( சுவிற்சலாந்து) பொறுப்பாளர் திரு. சங்கர் அவர்கள் ஆற்றியிருந்தார். 10 வருடங்கள் 18 வருடங்களாக கலைத்துறைகளில் கற்றுவரும் மாணவமாணவிகளை தகுதியான தரமானவர்களாக உருவாக்கின்ற செயற்பாடே இதுவெனவும் அத்துடன் ஒவ்வொரு மாணவர்களுக்கான முதன்மைத்தரம் வாய்ந்த பரீட்சைகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் தெரிவித்திருந்தார். ஒவ்வொரு நாடுகளில் இப்பணியை அர்பணிப்புடன் நேர்த்தியாகவும், திறம்படவும் செய்து வருகின்ற செயற்பாட்டாளர்களையும் , உறுதுணையாக இருக்கும் தமிழர் அமைப்புகளுக்கும் அனைத்துலக தமிழ்க் கலைநிறுவனத்தின் சார்பாக தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இந் நிகழ்வில் பங்கு கொண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவுகள் நண்பர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கியிருந்தனர்.
ஆற்றுகை தேர்வு இனிதே மாலை நிறைவு பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here